விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1998 days ago
திருவாரூர்: திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 153 வது தேவாரத்தலம். இங்கு ஆடிப்பூரம் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி வெள்ளி, ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது. கொரோனா காரணமாக, பொது மக்கள் நலனை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படவில்லை.