பூவாயி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு
ADDED :1914 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலூரில் பூவாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று, அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், பழரசம், பன்னீர் ஆகிய வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகம், மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.