பக்தர்கள் இன்றி ராமேஸ்வரம் கோயிலில் ஆடி தபசு
ADDED :1911 days ago
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலில் ஆடி தபசை யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை மாற்று நிகழ்வு நடந்தது. இக்கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழாவுக்கு ஜூலை 15 ல் கொடி ஏற்றினர். நேற்று ஆடிதபசை யொட்டி கோயிலுக்குள் தங்க பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மாலை மாற்று வைபமும், மகா தீபாராதனையும் நடந்தது. படம் எடுக்கப த்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. அதிகாரிகளே படம் எடுத்து அனுப்பினர். கொடி ஏற்றத்தின் போதும் கோயில் நிர்வாகம் இதே போன்று செய்தது குறிப்பிடத்தக்கது.