உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் அம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

செங்கழுநீர் அம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

புதுச்சேரி; புதுச்சேரி வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோயிலில் ஆடி மாத 92-ம் ஆண்டு மஹோற்சவ விழாவை முன்னிட்டு அம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது.

புதுச்சேரி வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், 92ம் ஆண்டு ஆடி மகா உற்வசம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனையடுத்து, அன்று மாலை 7:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, தினசரி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடந்து வருகிறது.மகா உற்சவத்தையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு கோவில் உள் வளாகத்திலேயே, திருத்தேர் உலா நடந்தது தொடர்ந்து தெப்பல் உற்சவம் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, உற்சவதாரர்கள் மற்றும் விழாக்குழுவினர் மட்டும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !