காரமடை ரங்கநாதர் கோவிலில் ஸ்தபன திருமஞ்சனம்
ADDED :2004 days ago
கோவை : காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடிபூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களில் பெண்ணிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வைணவ கோவில்களில் ஆண்டாளின் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கோவை மாவட்டத்தில் வைணவ கோவில்களில் பிரசித்தி பெற்ற காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் நேற்று காலை மூலவருக்கு உற்சவருக்கும் ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதியில்லை.