வங்கதேச காளி கோவில் புனரமைப்பு பணி துவக்கம்
ADDED :2004 days ago
புதுடில்லி : வங்கதேசத்தில் உள்ள பழமையான காளி கோவிலின் புனரமைப்பு பணிகளை, இந்தியா நேற்று துவக்கி வைத்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தின், நாத்தோர் மாவட்டத்தில், 300 ஆண்டுகள் பழமையான காளி கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைக்க, இந்தியா தரப்பில், 85 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வங்கதேச அரசு ஒதுக்கியுள்ள நிதியுடன் சேர்த்து, ஒரு கோடியே, 17 லட்சம் ரூபாய், இந்த புனரமைப்பு பணிகளுக்கு செலவிடப்பட உள்ளது.இந்நிலையில், இந்த கோவிலின் புனரமைப்பு பணி, நேற்று துவக்கப்பட்டுள்ளது. வங்கதேச தகவல் மற்றும் தொலை தொடர்புத் துறை இணை அமைச்சர் ஜுனைத் அகமது பாலக், இந்தியாவின் துாதர் ரிவா கங்குலி, நாத்தோர் மாவட்ட மேயர் உமா சவுத்ரி ஜோலி ஆகியோர், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, அந்த பணிகளை துவக்கி வைத்தனர்.