உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டுமான பணிக்காக அயோத்தி செல்லும் ராமேஸ்வரம் தீர்த்தம்

கட்டுமான பணிக்காக அயோத்தி செல்லும் ராமேஸ்வரம் தீர்த்தம்

 தேவகோட்டை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து புனித தீர்த்தம், ராமர் பாதத்தில் இருந்து மண் எடுத்து செல்லப்படுகிறது. விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் காளிதாஸ், செயலாளர் புருேஷாத்தமன் எடுத்து அயோத்தி நோக்கி சென்றனர். அவர்களுக்கு தேவகோட்டை அருகே புளியாலில் மாவட்ட தலைவர் கென்னடி, செயலாளர் அழகப்பன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் லட்சுமிநரசிம்மன், நகர் தலைவர் சுரேஷ், செயலாளர் வீரையா, அமைப்பாளர் புவனேஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !