உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானுாருக்கும் இ - உண்டியல் காணிக்கை

திருச்சானுாருக்கும் இ - உண்டியல் காணிக்கை

திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, நேரடியாக வந்து உண்டியலில் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்கள் வசதிக்காக, இணையதளத்தில், இ - உண்டியல் வசதியை, தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

தேவஸ்தான இணையதளம் மற்றும் கோவிந்தா மொபைல் ஆப் என, இரண்டிலும் இந்த வசதி உள்ளது. தற்போது, இந்த வசதி, திருச்சானுார் பத்மாவதி கோவிலுக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தாயாருக்கு காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வாயிலாக, காணிக்கைகளை செலுத்த முடியும். மேலும் விபரங்களுக்கு தேவஸ்தான இணையதளமான, tirupatibalaji.ap.gov.inஐ பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !