அயோத்தி கோவிலுக்கு ராமேஸ்வரம் மணல்
ADDED :1902 days ago
ராமேஸ்வரம் : அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் மணலை, பா.ஜ.,வினர் எடுத்துச் சென்றனர்.
உ.பி., மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, ஆக., 5ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மணல் சேகரித்து, பா.ஜ., இளைஞர் அணியினர் பூஜை செய்தனர். மணலை சென்னை எடுத்துச் சென்று, அங்கிருந்து விமானத்தில் அயோத்திக்கு அனுப்ப உள்ளனர்.இதேபோல, ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில், அம்மா மண்டபம் படித்துறையில் எடுக்கப்பட்ட மணல், வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, நேற்று அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி, திருமலையில் இருந்தும், தீர்த்தம் மற்றும் புற்று மண், நேற்று அயோத்திக்கு அனுப்பப்பட்டன.