உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி, திருச்சானூர் கோவிலில் பவித்ரோற்சவ திருவிழா

திருப்பதி, திருச்சானூர் கோவிலில் பவித்ரோற்சவ திருவிழா

திருமலை, திருப்பதியில் பவித்ரோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விழா கொண்டாடப்பட்டது. அம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏழுமலையானுக்கு தோமாலை மற்றும் அர்ச்சனை ஆகியவை தனிமையில் நடைபெறும்; பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், நேற்று வரலட்சுமி விரத பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று, வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று தாயாருக்கு அபிஷேகமும், ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜையும் நடைபெற்றது. அம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !