கயிறு கட்டினா கல்யாணம்
ADDED :1933 days ago
தமிழகத்தின் திரிவேணி என போற்றப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். கூடுதுறை ஆற்றில் நீராடி விட்டு சங்கமேஸ்வரரை பக்தர்கள் வழிபடுவர். தேங்காய், பழம், பூ, காதோலை, கருகமணி படைத்து நதிக்கு பூஜை செய்வர். பூஜையில் வைத்த மஞ்சள் கயிறினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் காப்பாக கட்டுவர். இதனால் ஆண்டு முழுவதும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.