பணியாளரிடமும் அன்பு
ADDED :1991 days ago
நாயகம் யாரைக் கண்டாலும் முகமலர்ச்சியுடன் புன்னகைப்பார். எப்போதும் இன்முகத்துடன் இருப்பார் எனச் சொல்கிறார் அனஸ். ‘‘நான் பத்தாண்டு காலம் நாயகத்திற்கு பணிவிடை செய்தேன். அவர்கள் என்னைப் பார்த்து ச்சீ என்று ஒருபோதும் கூறியது கிடையாது. நான் செய்ததை ‘ஏன் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாததை ‘நீ இவ்வாறு செய்ய வேண்டாமா?’ என்றோ அவர் கேட்டதில்லை’’ எனத் தெரிவித்தார்.