குட்டி பூனையின் தந்தை
ADDED :1916 days ago
ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் அபூஹுரைரா. சுகவாழ்வை துறந்து சாதனை படைத்த இஸ்லாத்தில் இணையும் முன் இவரது பெயர் அப்துஸ் சம்ஸ். சூரியனின் அடிமை என்பது பொருள். அப்துர்ரஹ்மான் என்று நாயகம் இவருக்கு பெயரிடபட்டார். இத்துடன் ‘குட்டிபூனையின் தந்தை’ என்னும் பொருளில் ‘அபூ ஹுரைரா’ புனைபெயர் சூட்டினார். மக்கள் மத்தியில் அப்பெயரே நிலைத்தது. இளமையில் செல்வ பெண்மணியிடம் பணியாளராக இருந்தார். அவள் வாகனத்தில் அமர்ந்திருக்க, காலில் செருப்பின்றி பின்னால் ஓடி வருவர். ஆடு, மாடு, ஒட்டகங்களை மேய்த்தார். நற்பண்பில் சிறந்த இவர் 5374 நபிமொழிகளை அறிவிக்கும் மேதையாகி நாயகத்தின் அன்பை பெற்றார். இறையருளால் அனைவரின் புகழுக்கும் வாழ்த்துக்கும் உரியவாராகத் திகழ்கிறார்.