முடிக்காணிக்கை: பாகம்பிரியாள் கோயிலில் பக்தர்கள் தவிப்பு
ADDED :1960 days ago
திருவாடானை:திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானபக்தர்கள் வந்து முடிக்காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். கொரோனா ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். சில பக்தர்கள் அங்குள்ள கடைகளில் முடி இறக்கி தெப்பக்குளத்தில் நீராடி சென்று விடுகின்றனர்.