திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
ADDED :1964 days ago
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை, நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கால், பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவில் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் மட்டும் பூஜை செய்தனர்.
இந்நிலையில், ஆடி மாத பவுர்ணமி திதி, இன்றிரவு (2ம் தேதி), 10:04 மணி முதல், நாளை (3ம் தேதி), இரவு, 9:54 வரை உள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.