விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடக்கும்
ADDED :1906 days ago
திருப்பூர்; விநாயகர் சதுர்த்தி விழா, எளிய முறையில் கொண்டாடப்படும் என, ஹிந்து முன்ணனி அறிவித்துள்ளது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில், கொரோனா காரணமாக, ஆக., 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் முழு முதல் கடவுளான விநாயகரின் சதுர்த்தி விழா, வரும் ௨௨ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு, கொரோனாவை விரட்டும் வகையில், விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை, எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன், கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
விசர்ஜன விழா ஊர்வலம் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் வழிகாட்டுதலை கடைப்பிடித்து கொண்டாட வேண்டும். மக்கள், அவரவர் வீடுகளில், மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டு, பிரார்த்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.