உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குசேலர் தினம்: குருவாயூரில் அலைமோதிய பக்தர்கள்.. அவல் வைத்து வழிபாடு

குசேலர் தினம்: குருவாயூரில் அலைமோதிய பக்தர்கள்.. அவல் வைத்து வழிபாடு

பலக்காடு; குசேலர் தினத்தையொட்டி குருவாயூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ண கோவில். இங்கு இன்று குசேலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு அவல் வழிபாடு மூலவருக்கு சமர்ப்பித்து தரிசனம் நடத்தினர். பக்தர்களின் அவல் வழிபாடுகள் பெற்றுக்கொள்ள கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தன. குசேலர் தினத்தின் சிறப்பு அவல் வழிபாடு காலை பந்தீரடி பூஜைக்கு பிறகு மூலவருக்கு நிவேதித்தன. பிரசாதம் விநியோகம் நடந்தன. குசேலர் தினத்தையொட்டி கோவில் வளாக மேல்புத்தூர் கலையரங்கில் கலாமண்டலம் நீலகண்டன் நம்பீசன் நினைவுக்காக காலை முதல் கதகளிபத கச்சேரி அரங்கேறின. இரவு சபாபதியின் கதகளி நடன நிகழ்ச்சியும் அரங்கேறின. அதே நேரத்தில் கோவிலின் மஞ்சுளால் பகுதியில் புதிதாக நிறுவிய குசேலரின் உருவ சிலை அர்ப்பணிப்பு மற்றும் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவை கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன் துவக்கி வைத்தார். பிஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு குத்துவிளக்கு ஏற்றிய நிகழ்ச்சியில் குழு உறுப்பினர்களான மனோஜ், விஸ்வநாதன், மனோஜ் நாயர், நிர்வாகி அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பி உண்ணி கானாயி உருவாக்கிய இந்த உருவ சிலையை திரைப்படத் தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி காணிக்கையாக வழங்கி உள்ளது குறிப்பிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !