உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் நாளை ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜை

மதுரையில் நாளை ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜை

மதுரை,மதுரை மாவட்ட வி.எச்.பி., தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளதாவது: வி.எச்.பி., கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, மேலுார் தாலுகாக்களிலுள்ள கிராம கோயில்களிலும், நகரில் உள்ள சிந்தாமணி, அனுப்பானடி கோயில்களிலும் நாளை (ஆக., 5) காலை 11:30 மணிக்கு அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் நேரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். ராம நாம பாராயணம் நடக்கும். கோயில்களுக்கு செல்ல முடியாத ராம பக்தர்கள் வீடுகளில் ராம நாம பாராயணம் செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !