சிறப்பு அலங்காரத்தில் கண்ணனூர் மாரியம்மன்
ADDED :1946 days ago
ஓமலூர்: தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர் பங்கேற்பர். நடப்பாண்டு ஊரடங்கால், நேற்று முன்தினம் முதல், அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்து வருகின்றனர். நேற்று, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஆனால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாதபடி, சுற்றி கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.