பஞ்சவடி கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு திருமஞ்சனம்
ADDED :1900 days ago
பஞ்சவடி : அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நல்ல முறையில் நடக்க வேண்டியும், மகா சம்ப்ரோகக்ஷணம் விரைவில் நடக்க வேண்டியும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்திக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ராமச்சந்திர மூர்த்தி அருள்பாலித்தார். தனிமனித இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.