அயோத்தி ராமர் கோவில் கட்டு மானப் பணிகள்: 3 ஆண்டுகளில் முடியும்
ADDED :1906 days ago
அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டு மானப் பணிகள், மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத்தின், சர்வதேச தலைவர், சதாசிவ் கோக்ஜே, நேற்று கூறியதாவது:நம் நாடு, சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை, காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் முயற்சி, தடைபட்டு வந்தது.இன்று, அந்த கனவு நனவாகி உள்ளது. இது, உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் மத்தியில், புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், கோவில் கட்டுமானப் பணி நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.