ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1902 days ago
சங்கராபுரம் : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றதை யொட்டி, காட்டு வனஞ்சூர் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் பூமி பூஜை நடந்தது. கோவில் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற வேண்டி சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூர் ராமர் கோவிலில், தர்மகர்த்தா வெங்கடேச பாகவதர் தலைமையில் அன்பழகன் முன்னிலையில் 108 விளக்கேற்றி பக்தர்கள் ராமநாம பஜனை செய்தனர்.