ருக்மணி பூஜித்த கிருஷ்ணர்
ADDED :1905 days ago
பாலகனாக இருந்த போது கிருஷ்ணரின் வடிவழகைக் காண ருக்மணி ஆசைப்பட்டாள். தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் தெரிவித்தாள். அவரும் சாளக்ராம கல்லில் கிருஷ்ணர் சிலை வடித்தார். வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயுமாக கிருஷ்ண சிலையை உருவாக்கினார். அச்சிலையை பூஜையறையில் வைத்து பூஜித்து வந்தாள். அச்சிலையே கர்நாடகாவிலுள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் மூலவராக உள்ளது.