குன்றக்குடியில் கந்தசஷ்டி பாராயணம்
ADDED :1930 days ago
காரைக்குடி: குன்றக்குடி திருமடத்தில் கொரோனா ஒழியகந்தசஷ்டி பாராயணம் நடந்தது.குன்றக்குடியில், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனோ தொற்று ஒழிந்திடவும், மக்கள் நல்வாழ்வு பெற வேண்டியும் குன்றக்குடி திருமடத்தில் கந்தர்சஷ்டி பாராயணம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் நடந்த பாராயணத்தில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பாராயணம் செய்தனர்.