உலக நலன் வேண்டி பாராயணம்
ADDED :1987 days ago
மதுரை, மதுரை கோச்சடையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பிராமணர் சங்கம் சார்பில் உலக நலன் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி லிலதா சகஸ்ரநாமம் பாராயணம் நடந்தது. சங்க தலைவர் குருபிரசாத் தலைமை வகித்தார். சமூக இடைவெளி பின்பற்றி சங்க ஆலோசகர்கள் சங்கரன், கிருஷ்ணசாமி, உதவி தலைவர் சீனிவாசராகவன், பொருளாளர் சுந்தரம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.