உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கிரிவல ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

குன்றத்து கிரிவல ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிலவம் செல்கின்றனர்.இதற்காக சுப்பிரமணியசுவாமி கோயில் வாசல் முதல் மலையை சுற்றி 3.25 கி.மீ.,க்கு தார், ஒரு கி.மீ.,க்கு சிமென்ட் ரோடுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்றதால் சேதமுற்றது. கிரிவல பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். பக்தர்களுக்கு ரோடு வசதி செய்ய மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவிட்டார். அதன்படி பெரிய ரத வீதியிலிருந்து நிலையூர் பிரிவு வரை 2 கி.மீ.,க்கு கிரிவல பக்தர்கள் செல்ல வசதியாக கிரிவல ரோட்டின் இருபுறமும் தலா 7 அடி அகலப்படுத்தி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுகிறது. கிரிவல ரோட்டையும் சீரைமைத்து தார் போட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !