தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வீடுகளில் வேல் பூஜை
ADDED :1887 days ago
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், தங்களின் வீட்டின்முன் வேல் படம் வரைந்து, வேல் பூஜை செய்தனர். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கயவர் கூட்டத்திற்கு எதிராக, தமிழகம் முழுவதும், ஆடி மாதம் சஷ்டி தினமான நேற்று, பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டின் முன், முருகன் படம் வைத்து, வேல் வரைந்து, வேல் பூஜை செய்ய வேண்டும் என, பொதுமக்களுக்கு, இந்து அமைப்புகள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடவள்ளி, வீரகேரளம், வேடபட்டி, தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்துக்கள், நேற்று மாலை, 6:00 மணிக்கு, வீட்டின் வாசலில், முருகர் படம் வைத்து, வேல் கோலம் வரைந்து, பூஜை செய்து, கந்த சஷ்டி கவசத்தை பாடினர்.