காரைக்கால் சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவம்
ADDED :1888 days ago
காரைக்கால் : காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, ருத்ர கலச அபிஷேகம் நடந்தது.அதனைத் தொடர்ந்து விதைதெளி உற்சவம் நடந்தது. இதில் சிவகாமி அம்பாள் சமேதராக சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.கொரோனா தொற்றால் மிக எளிய முறையில் கோவிலின் எதிரே உள்ள நிலத்தில், விதை தெளி உற்சவம் விழா நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியில், முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.