தட்டாஞ்சாவடி தொகுதியில் சஷ்டி பாராயணம், வேல் பூஜை
ADDED :1889 days ago
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுடன் இணைந்து பா.ஜ.,வினர் வேல் பூஜை நடத்தினர். வீடுகளில் கந்தசஷ்டி கவச பாராயணம் செய்ததுடன், வீட்டு வாசலில் வேல் வரைந்து விளக்கு ஏற்றி வேல் பூஜை செய்தனர். கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தவர்களை கண்டித்து நடந்த வேல் பூஜைக்கு, தட்டாஞ்சாவடி தொகுதி பா.ஜ., தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஷ்வரன் முன்னிலை வகித்தார். தொகுதி துணைத் தலைவர்கள் லிங்கமூர்த்தி, முனிக்குமாரி கணபதி, பொதுச் செயலர்கள் சந்துரு, ரமணாஷங்கர், செயலர் ஆனந்தி ராமு, ஓ.பி..சி., அணித் தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி பொதுச் செயலர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.