உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பூர் அம்பிகை பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கடம்பூர் அம்பிகை பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

தூத்துக்குடி : கடம்பூர் அம்பிகை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடம்பூர் அம்பிகை பராசக்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 9வது நாளை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தை கண்டுகளித்தனர். தேரோட்டத்தில் கடம்பூர் உறவின் முறை செயலாளர் தங்கப்பன், அறங்காவலர் ஜனார்த்தனன், தலைவர் ஜெயராஜ், சென்னை வாழ் இந்துநாடார்கள் மகமை பரிபாலனத்தலைவர் சௌந்திரபாண்டியன் செயலாளர் சக்கரவர்த்தி, அரிகிருஷ்ணன், சந்திரன் மற்றும் கோவில்பட்டி, மதுரை, சென்னை வாழ் நாடார் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி வாழ் கடம்பூர் இந்துநாடார்கள் சார்பாக தேரோட்டத்தில் செண்டைமேளம் முழங்கப்பட்டது. இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு அம்மன் பூம்பல்லக்கில் வீதிவலம் வந்து பொ துமக்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்ட ஏற்பாடுகளை கடம்பூர் மற்றும் சென்னை வாழ் உறவின் முறை பரிபாலனத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !