பாவம் போக்கும் கோவிந்தா!
ADDED :1913 days ago
‘‘பார்வதி பதியே’’ என்று ஒருவர் சொன்னால், மற்றவர்கள் அவளது துணைவரான சிவபெருமானை, ‘ஹர ஹர மகாதேவ’ என்று சொல்வது வழக்கம். ஆனால், கோவிந்த நாமத்தைச் செல்லும்போது முதலில் சொல்பவர் ‘சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்’ என்று கோவிந்தன் பெயரைச் சொன்னால் கேட்பவர்களும் ‘‘கோவிந்தா கோவிந்தா’’ என்று தான் சொல்வர். ‘சர்வத்ர’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான். சர்வலோக சக்கரவர்த்தியாக இருக்கும் கடவுள், பரம எளியவனாக பசுக்கூட்டத்தோடு பால கிருஷ்ணனாக திரிந்த வேளையில் ஏற்பட்ட பெயர் ‘கோவிந்தன்’ என்பதாகும்.