உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணர், ராதை வேடத்தில் குழந்தைகள்

கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணர், ராதை வேடத்தில் குழந்தைகள்

 கோவை: ரத்தினபுரியில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களில் அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா, ரத்தினபுரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், ரத்னபுரி, விநாயகர் கோவிலில், கிருஷ்ணர் சிலை வைத்து, பூஜை செய்து வணங்கினர். அதனை தொடர்ந்து, ரத்தினபுரி, விநாயகர் கோவில் பகுதியில் உள்ள, 55 குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து விழாவை அலங்கரித்தனர். வேடம் அணிந்து இருந்த குழந்தைகளுக்கு, இனிப்பு வழங்கி, பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிவானந்தாகாலனி, என்.சி.கே.என்., அவன்யூவில், நடந்த விழாவில், 23 குழந்தைகளும், ராமநாதபுரத்தில் நடந்த விழாவில், 30 குழந்தைகளும், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து இருந்தனர். இவ்விழாவில், கலந்துகொண்ட அனைவரும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி இருந்தனர். விழாவிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர் மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !