வடபழனி முருகன் கோவில் வாசலில் பக்தர்கள் வழிபாடு
ADDED :1987 days ago
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். கிருத்திகை நாளில் கோவிலில், ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர். இந்தாண்டு, கொரோனா தொற்றால் கோவில் மூடப்பட்ட நிலையில், ஆடிக்கிருத்திகையொட்டி வடபழனி முருகன் கோவில் வாசலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.