உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

வேப்பூர்: நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடந்தது. வேப்பூர் அடுத்த நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில், வடக்கு பார்த்த முருகன் சுவாமிக்கு ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், முருகனின் ஆறு முகங்களுக்கும் தனித்தனி பூஜைகள், பால், பன்னீர், நெய், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள், ஹோம பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து, ஆடி கிருத்திகை குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !