பழநி மலைக்கோயிலில் போலீஸ் பாதுகாப்பு
ADDED :1901 days ago
பழநி: சுதந்திர தினத்தையொட்டி பழநி மலைக்கோயில் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
பழநி மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்ககோபுரம், கோயில் சுற்றுபிரகாரம், மற்றும் உபகோயில்கள் என அனைத்திற்கும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தங்ககோபுரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பழநி ரயில்வே ஸ்டேசனிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் கண்கணிப்பு, பிளாட்பார பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பொன்னுச்சாமி, மகேஷ்வரன் தலைமையில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.