திருத்தணி கோவிலில் தெப்பத் திருவிழா
ADDED :1952 days ago
திருத்தணி :திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. நேற்று, இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கமரகதகல், தங்க கீரிடம், வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாரானை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் மண்டபம் எதிரில் அமைக்கப்பட்ட தற்காலிக குளத்தில் உற்சவர் முருகப் பெருமான், தெப்பத்தில் எழுந்தருளி, ஐந்து முறை வலம் வந்தார்.இந்நிகழ்ச்சியை, கோவில் இணைய தளம் மற்றும், யு டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இன்று, மூன்றாம் நாள் தெப்பத்துடன் நடப்பாண்டிற்கான ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நிறைவடைகிறது.