விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வு கூட்டம்
ADDED :1893 days ago
ப.வேலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ப.வேலூர் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராஜாரணவீரன் தலைமை வகித்தார். விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை வீடுகளிலேயே தனியாக வைத்து வழிபாடு நடத்திக் கொள்ளலாம். அரசு அனுமதித்துள்ள சிறிய கோவில்களில் வழிபாடு செய்யும் போதும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்து வழிபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சரவணன்,ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.