உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்த கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சித்தானந்த கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

புதுச்சேரி : சித்தானந்த சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சுவாமி மற்றும் நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ உற்சவம் நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி மற்றும் நந்தியம் பெருமானை சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !