விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2050 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று பிரதோஷம் என்பதால், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நந்தியம்பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இல்லாமல், நடந்த வழிபாட்டில், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.