செப்.19ல் திருமலை திருப்பதி பிரம்மோற்ஸவம் துவக்கம்
ADDED :1891 days ago
திருப்பதி, திருமலையில் புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடைபெறும். இதன்படி செப்.19 முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடைபெற உள்ளது. அக்.16 முதல் 24ம்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. வருடாந்திர பிரம்மோற்ஸவத்தின் போது மட்டுமே கொடியேற்றம், கொடியிறக்கம், திருத்தேர் வலம் நடக்கும். நவராத்திரி பிரம்மோற்ஸவத்தின் போது கொடியேற்றம் இறக்கம் திருத்தேர் வலம் உள்ளிட்டவை நடக்காது. திருத்தேர் வலத்திற்கு பதிலாக தங்கத்தேர் வலம் நடைபெறும்.