16ம் நுாற்றாண்டை நடுகல் கண்டுபிடிப்பு
ADDED :1890 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லுாரில் 16 ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுக்கல் கண்டறியப்பட்டது.
பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் செல்லப்பாண்டியன், வரலாற்று மாணவர் விஜயகுமார் கூறியதாவது: இந்த நடுகல் கி.பி., 16ம் நுாற்றாண்டை சேர்ந்த நவகண்டம் சிற்பமாகும். நவகண்டம் என்பது தனது நாடு போரில் வெற்றி பெற வேண்டி வீரன் ஒருவன் கொற்றவைக்கு தன்னை பலியிட்டு கொள்வதை நவகண்டம் என்பர்.இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் தன் கழுத்தை தானே அறுத்து கொள்ளும் விதமாக செதுக்கியிருப்பதால் நவகண்டம் சிற்பம் என்பதை உறுதி செய்கிறது. நாயக்கர் காலத்தை சேர்ந்த நவகண்டம் சிற்பத்தை காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த இரண்டாவது நவகண்டம் சிற்பமாகும் என்றார்.