உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காரைக்கால்:காரைக்கால் திருப்பட்டினம் ஆயிரம் காளி யம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது.காரைக்கால் திருப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காளியம்மன் பூஜை விழா நடக்கும். அப்போது, அம்மன் பெட்டியிலிருந்து எழுந்தருள செய்து, 2 நாட்கள் பூஜைகள் நடக்கும். அப்போது, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். 2 நாட்கள் கழித்து மீண்டும் அம்மன் பெட்டிக்குள் வைத்து ஸ்தாபிதம் செய்யப்படும். அதன்பின் அடுத்த 5 ஆண்டுகள் கழித்தே மீண்டும் பூஜை விழா நடக்கும். இந்த ஆண்டு வரும் 22ம் தேதி பூஜை விழா துவங்குகிறது. 23 மற்றும் 24ம் தேதி அம்மனை தரிசிக்கலாம். இந்நிலையில் இந்தக் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, 14ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 15ம் தேதி இரண்டாம்கால விஷேச சாந்தி, யாகசாலை பூஜை பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகபூஜையும், மகா பூர்ணாஹூதி நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !