108 விநாயகர் சிலை அமைக்க ஹிந்து முன்னணி தீர்மானம்
கோபி: ஹிந்து முன்னணி, கவுந்தப்பாடி நகர் சார்பில், விநாயகர் சதுர்த்தி குறித்த, ஆலோசனை கூட்டம், கவுந்தப்பாடியில் நேற்று நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரை செல்வன் முன்னிலை வகித்தார். சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். விழாவுக்கு, அரசு தடை விதித்துள்ளதை கண்டிக்கிறோம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, விழாவை கொண்டாட வேண்டும். கொரோனா தொற்றால், பொது கூட்டம், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், இந்தாண்டு மட்டுமே ரத்து செய்யப்படுகிறது. தடையை மீறி, கவுந்தப்பாடியில் 108 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, காப்பு காட்டி விரதம் இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில், நகரம், ஒன்றியம் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.