விநாயகர் சதுர்த்தி விழா தடை நீக்க கோரிக்கை
சென்னை, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட விதித்த தடையை நீக்குவதுடன், மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும், என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு, கொரோனா காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவை, ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது. காவல் துறை துணையோடு, டாஸ்மாக் கடைகளை திறந்து, மது விற்கும்போது பரவாத நோய்; விநாயகர் சதுர்த்தி விழாவில் பரவும் என்பது, ஆச்சர்யம் அளிக்கிறது.தற்போது, கொரோனா குறைந்து வருவதாக, அரசு அறிவித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது வெளியில் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும்.2ம் தலைநகர் மதுரைஅதேபோல், வருங்கால மக்கள் தொகை பெருக்கம், நிர்வாக வசதி, தொழில் வளர்ச்சி, அதிகார பரவல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கருத்தில் வைத்து, மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.சுயசார்பு நிலையை, நாடு முழுதும் நிறைவேற்ற வேண்டும் என்ற, பிரதமர் மோடியின் இலக்கை நிறைவேற்றும் வகையில், இந்த முடிவு, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும். இதை முன்கூட்டியே உணர்ந்து, செயல்படுத்த முயன்ற, எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேற்றியதாகவும் அமையும்.தங்கள் ஆட்சி காலத்தில், மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவித்து, சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.