உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலை விற்பனை டல்: வியாபாரி வேதனை

விநாயகர் சிலை விற்பனை டல்: வியாபாரி வேதனை

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு நடக்கும் விநாயகர் சிலை விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. இதனால் வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு, விசர்ஜன ஊர்வலம் விமரிசையாக நடக்கும்.இந்து முன்னணி உட்பட இந்து அமைப்பினர் சார்பில் பெரிய அளவிலான சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெறும். கோவில்களிலும், வீடுகளிலும் பக்தர்கள் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபாடு செய்வர். புதுச்சேரி, தருமபுரி பகுதிகளிலிருந்து இது போன்ற சிலைகள் திருப்பூர் வருகிறது. இவை குறைந்த பட்சம் 10 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்கும் மேலான விலைகளில் விற்பனையாகும். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிலைகள் உற்பத்தி பெரியளவு நடக்கவில்லை.இதனால், அதிகளவு சிலைகள் திருப்பூர் கொண்டு வரப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஒரு சிலர் கடைகள் வைத்து விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைத்துள்ள நிலையிலும், வழக்கமான விற்பனை இல்லை என, வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !