ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1984 days ago
எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையத்தில், ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் நேற்று, அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையத்தில் ஆதிநாகஅருளீஸ்வரர் உடனமர் கருணாம்பிகை தாயார் கோவில் உள்ளது. ஆவணி மாத அமாவாசை தினமாவ நேற்று, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபி?ஷக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.