விநாயகர் சதுர்த்தி கூட்டம்
ADDED :1877 days ago
விருதுநகர்: விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கண்ணன் பேசியதாவது: ஆக. 31 வரை 144 தடை உத்தரவு உள்ளதால் சிலை நிறுவ, ஊர்வலம் கூடாது. அவரவர் வீட்டில் கொண்டாடலாம். ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான வருவாய் உள்ள சிறிய கோயில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தலாம், என்றார்.எஸ்.பி., பெருமாள் முன்னிலை வகித்தார்.