உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடுகளில் விநாயகர் சதுர்த்தி: மக்களுக்கு அறிவுரை

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி: மக்களுக்கு அறிவுரை

 சென்னை : பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைப்படி மதம் சார்ந்த விழாக்கள்,கூட்டு வழிபாடுகள் தடை செய்யப்பட்டு உள்ளன. எனவே பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும் வழிபாடு நடத்துவதையும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் அரசு தடை செய்துள்ளது.எனவே பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றமும் அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !