விநாயகர் சதுர்த்தி விழா: இந்து முன்னணி முடிவு
ADDED :1870 days ago
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, தனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு செய்ய இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கொரோனா பரவல் காரணமாக, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்க வேண்டும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் கொண்டாடப்படும். நாளை (இன்று) தனியார் இடங்களில், வீடுகளில், கோவில்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கூட்டம் சேராமல், அவரவர் ஏற்பாடுகளில் அன்று மாலையே விசர்ஜனம் செய்யப்படும். அரசு அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.