தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
மதுரை : மதுரை, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் செளபாக்ய விநாயகருக்கு, சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.
உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்கவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் சுண்டல், பொங்கல், கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.